12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ், பணிநிரந்தரம் வழங்கி
ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்!
அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் விளையாட்டு, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களில் 12ஆயிரம் பேர் 10 ஆண்டுக்கும் மேல் தற்போது ₹10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் 181ல் தமிழக முதல்வர் முன்பு சொன்னபடி உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
20 மாதங்களாக திமுக ஆட்சி நடக்கிறது.
ஆனாலும், பணிநிரந்தரம் செய்யாமல் இருப்பதோடு சம்பளத்தையும் உயர்த்தவில்லை.
அதோடு இந்த பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் இல்லை என்பது அதிர்ச்சியில் தள்ளுகிறது.
11ஆண்டு பள்ளிகளில் வேலை செய்யும் போது, அவர்களுக்கு போனஸ் வழங்காமல் இருப்பது நியாயம் ஆகாது.
பகுதிநேர ஊழியர்களுக்கு போனஸ் உண்டு என்று உத்தரவு உள்ளப்போது, அதை போன்று பகுதிநேர ஆசிரியர்களுக்கும் போனஸ் உண்டு என அறிவித்து இருக்க வேண்டும்.
எனவே மனிதாபிமானத்துடன் தமிழக முதல்வர் அவர்கள் உடனே 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும்.
மேலும், 11 ஆண்டாக தற்காலிக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி வலியுறுத்தியுள்ளது.
ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களது நியாமான கோரிக்கைகளையும் உடனே கவனத்தில் எடுத்து தாமதிகாமல் நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக தமிழக முதல்வரை ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் அவர்களால் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.