தமிழகத்தில் தற்போது 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களை கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்வதற்கான தேர்வு குறித்த விவரங்கள் அனைத்தும் தற்போது வெளியாகியுள்ளது.
கல்வி உதவித்தொகை:
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்திட்டத்தின் படி 9 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் வருடத்திற்கு ரூ.12,000 கல்வி உதவித்தொகை அளிக்கும் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி, தற்போது 8ம் வகுப்பில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும், மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை https://dge1.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் 20.01.2023 வரை பெற்றுக் கொள்ளலாம்.
அதன்பிறகு, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேர்வுக்கான கட்டணம் ரூ.50 உடன் சேர்த்து தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜனவரி 24ம் தேதி இறுதி நாள் ஆகும். NMMS தேர்வானது வட்டார வாரியாக தேர்வு மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 25ம் தேதியான சனிக்கிழமை அன்று தேர்வுகள் நடக்க உள்ளது. தேர்வு குறித்த மேலும் அதிக விவரங்களை மாணவர்கள் அதிகாரபூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.