WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, January 5, 2023

JEE NEET தேர்வுகளுக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் உயர்கல்வி பயில எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள் குறித்து வழிகாட்டுவதற்கு பல்வேறு முன்னேடுப்புகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, ஆர்வமுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படிக்க விரும்பும் படிப்புகளுக்கு சரியான நேரத்தில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்பங்கள், விண்ணப்பிக்க தொடங்கும் நாள், முடிவடையும் நாள், கட்டண விவரம் போன்றவை அனைத்து கல்வி மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை கொண்டு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் NSS மாணவர்கள் உதவியோடு நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவி செய்ய முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த NSS மாவட்ட தொடர்பு அலுவலர்கள் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு பள்ளிகளிலும் வரும் 4-ம் தேதி முதல் நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய விருப்பமுள்ள மாணவர்களுக்கு உதவுவார்கள். அதற்கான முன்னேற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்று செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் JEE உள்ளிட்ட அனைத்து வகை நுழைவுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தல் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள வீடியோக்களை ஹை டெக் ஆய்வகங்கள் வாயிலாக மாணவர்களுக்கு காட்சிபடுத்தி, விழிப்புணர்வை உண்டாக்கி ஊக்கமளிக்க வேண்டும்.

அதன்படி பள்ளிகளில் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தகவல்களை வரும் 15.01.2023 க்குள் cgtnss@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.