தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள் தங்களது விவரங்களை பிப்ரவரி 10ம் தேதி வரை இணையதளத்தில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் தான் 10, 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் முழுமையான பாடத்திட்டத்தின் படி பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக நடப்பு கல்வி ஆண்டில் ஆரம்பம் முதல் மாணவர்களுக்கு கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல் பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜனவரி மாதத்தின் பிற பிற்பகுதியில் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளது. இதற்காக மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தேர்வு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றை பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் முறைப்படி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தேர்வு துறை இயக்குனர் சேதுராம வருமா அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.