மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வின் புதிய அறிவிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி புதிதாக 4 சதவீத அளவிற்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவளைப் படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. நாட்டின் விலைவாசி உயர்வை ஈடு கட்டுவதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. நாட்டின் CPI-IW அளவை பொருத்து தான் அகவிலைப்படி உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி டிசம்பர் CPI-IW 2022 க்கான அளவீடுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வானது 4.23 சதவீதமாக இருப்பதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொது செயலாளர் சிவகோபால் மிஸ்டர் அவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஜனவரி 2023 தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நடப்பு தவணைக்கான அகவிலைப்படி உயர்வானது நாலு சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போதைய 38% DA ஆனது 42 % ஆக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுக்கான மத்திய அரசின் ஒப்புதல் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.