தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7198 காலி பணியிடங்கள் உள்ளது. ஏற்கனவே 5303 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் புதியதாக யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வி தகுதியுடன் 1895 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை 20000 மாத சம்பளத்தில் தமிழக உயர்கல்வித்துறை ஆணையிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த டிசம்பர் 15 முதல் 29ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நியமனத்திற்காக வெளியிடப்பட்ட அரசாணையை பின்பற்றி இந்த நியமனம் முழுமையாக நடைபெறவில்லை என ஏற்கனவே பணியாற்றி, பணிவாய்ப்பினை இழந்த கௌரவ விரிவுரையாளர்கள் தமிழக உயர்கல்வித்துறை அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 1895 கௌரவ விரிவுரையாளர்களின் நியமனம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட அரசாணையில் ஏற்கனவே அரசு கல்லூரியில் பணியாற்றி பணி வாய்ப்பினை இழந்த (அண்ணாமலைப் பல்கலைக்கழக பணி நிரவல் மற்றும் நிரந்தரப் பேராசிரியர் பணி நிரவல்) கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அரசாணையின்படி நியமனம் நடைபெறவில்லை. ஆகையால் ஒரு சில கௌரவ விரிவுரையாளர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். நீதிமன்றத்தை நாடிய கௌரவ விரிவுரையாளர்களுக்கு நீதிமன்றமானது பணிவாய்ப்பு வழங்கும்போது பாதிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை கருத வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை ஒரு சில கௌரவ விரிவுரையாளர்கள் அணுகி பணம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் அது சம்பந்தமான ஆதாரங்கள் ஊடகத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாது கௌரவ விரிவுரையாளர் நியமனம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடாமல் திடீரென யுஜிசி வழிகாட்டுதல் நெறிமுறை 2018ல் குறிப்பிட்ட சில முக்கியமான சாரம்சங்களை பின்பற்றி 1895 கௌரவ விரிவுரையாளர்களுக்கான நியமன பட்டியல் நேர்படத் தன்மையுடன் வெளியிட்டு தில்லு முல்லு வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பட்டியல் வெளியிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் பணிஆணை வழங்கும்போது உயர் கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட ஒரு சில உயர் அதிகாரிகளுக்கு தெரியாமலேயே திட்டமிட்டு கௌரவ விரிவுரையாளர்களை சொந்த மாவட்டத்தில் காலி பணியிடங்கள் இருந்தும் தூரமான கல்லூரிகளில் பணிபுரிய ஆரம்பத்தில் ஆணை வழங்குகிறார்கள். அரசு அதிகாரியிடம் முறையிட்ட போது புதியதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளில், ஏற்கனவே அதிகமான காலி இடங்கள் உள்ளது என்ற நோக்கத்துடன் மட்டுமே பணிஆணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்பதற்கு உதாரணமாக ஒரு சில கௌரவ விரிவுரையாளர்களின் பணி மாறுதல்களை தவிர்த்து பெரும்பாலன கௌரவ விரிவுரையாளர்களின் பணி மாறுதல்கள் சிபாரிசுகள் அடிப்படையிலும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி மாறுதல் பணி வழங்கி உள்ளனர் என்பது பலன் அடைந்தவர்கள் மூலமாகவே தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கௌரவ விரிவுரையாளர் பணி மாறுதல்கள் சம்பந்தமான தில்லு முல்லு வேலைகள் எல்லாம் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்கு தெரியாமலேயே அதிகாரிகள் தரப்பில் ரகசியமாக நடந்து வருவதாக தகவல். உதாரணமாக ஒரு சில கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் போது அரசு கல்லூரியில் போதுமான காலி பணியிடங்கள் இருப்பினும் மறைக்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாகவும், அதன் பிறகு கௌரவ விரிவுரையாளர் பணி மாறுதலுக்கு 20 ஆயிரம் 50 ஆயிரம் 1 லட்சம் என பணம் வாங்கிக்கொண்டும் சிபாரிசுகள் அடிப்படையிலும் புதியதாக தேர்வாகியுள்ள 1895 கௌரவ விரிவுரையாளர்களில் ஒரு சிலர்களை தவிர்த்து மற்றவருக்கு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி ஆக இருந்து அரசு கல்லூரி ஆக மாற்றம் செய்யப்பட்ட 41 அரசு கல்லூரிகளை தவிர்த்து மீதமுள்ள அரசு கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை ஒரு சில கௌரவ விரிவுரையாளர்கள் அமைப்பின் நிர்வாகிகள் கல்லூரி கல்வி இணை இயக்குனர்களின் உதவியாளர்கள் மற்றும் முதல்வர் உள்ளிட்ட நிரந்தரப் பேராசிரியர்கள் மூலமாக பணம் பெற்றுக்கொண்டு பணி மாறுதல் வழங்கியுள்ளனர் என்றும் பேசப்பட்டு வருகிறது.இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு சிலருக்கு உயர்கல்வித்துறை இலவசமாக பணி மாறுதல் வழங்கினாலும் புரோக்கர்கள் ஏமாற்றியும் மிரட்டியும் பணத்தை வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக தமிழக முதல்வர் அவர்களும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதுமட்டுமல்லாது புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள
*1895 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஜனவரி மாதம் பிப்ரவரி மாதம் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. விசாரித்ததற்கு
இந்தியாவிலேயே தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிற காரணம் ஒருபுறமும், அருகில் உள்ள மாவட்ட அரசு கல்லூரிக்கு பதிலாக தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளில் பணி நியமன ஆணை வழங்குவதாக குற்றச்சாட்டு எழும்புவதால், புதியதாக வெளியிட்ட 1895 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களை கடந்த இரண்டு மாதங்கள் ஆகியும் முழுமையாக நிரப்பி முடிக்காமல் ஊதிய ஒதுக்கீடு செய்ய முடியாமல் தமிழக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மாதம் ஆகியும் கௌரவ விரிவுரையாளர் பணி நியமனங்கள் முழுமையாக பூர்த்தி அடையாததால் ஊதியத்தை கல்லூரிக்கு ஒதுக்கவில்லை. இதனால் புதியதாக பணிக்கு சேர்ந்த கௌரவ விரிவுரையாளர் குடும்பங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஒரு சில கௌரவ விரிவுரையாளர்கள் தனியார் கல்லூரிகளில் அதிகமான ஊதியம் பெற்றிருந்தாலும் கூட அரசு பணி என்பதாலும் ஊதிய உயர்வு கிடைக்கும் என்பதாலும் தனியார் வேலையை விட்டுவிட்டு கௌரவ விரிவுரையாளர் பணிக்கு வந்துள்ளனர். கௌரவ விரிவுரையாளர்களின் தொடர் போராட்டங்கள் அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவுகள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டு பேசிய தமிழக ஆளுநரின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையிலும் கௌரவ விரிவுரையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்பனையும் பூர்த்தி செய்யும் வகையில் வருகின்ற தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பணி நிரவல் மற்றும் நிரந்தர பேராசிரியர் பணி நிரவல் பாதிக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி வாய்ப்பு கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்பட வேண்டும்
என தமிழக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.