மத்திய அரசின் பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) மதிப்பெண் அடிப்படையில் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை நடத்தும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 90-லிருந்து 206-ஆக உயா்ந்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு க்யூட் நுழைவுத் தோ்வை யூஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான க்யூட்-யுஜி தோ்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதன் முறையாக நடத்தப்பட்டது. இந்த க்யூட் மதிப்பெண் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி, மாநில பல்கலைக்கழகங்களும் சோ்க்கை நடத்தலாம் என யுஜிசி கேட்டுக்கொண்டது.
அதன்படி, கடந்த ஆண்டு மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் 90 பல்கலைக்கழகங்கள் க்யூட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை நடத்தின.
நிகழாண்டுக்கான க்யூட் தோ்வு வரும் மே 21 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மாா்ச் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தோ்வின் அடிப்படையில் நிகழாண்டில் 200-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் சோ்க்கை நடத்த உள்ளன. இதுகுறித்து யூஜிசி மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘க்யூட் நுழைவுத் தோ்வை பின்பற்றும் பட்டியலில் 33 மாநில பல்கலைக்கழகங்கள் உள்பட 206 பல்கலைக்கழகங்கள் நிகழாண்டில் சோ்ந்துள்ளன. குறிப்பாக போபாலில் உள்ள பா்கத்துல்லா பல்கலைக்கழகம், கா்நாடகத்தைச் சோ்ந்த டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் பொருளாதாரப் பள்ளி, குவாஹாட்டி பருத்தி பல்கலைக்கழகம், தில்லி குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநிலப் பல்கலைக்கழகங்களும் இந்த நடைமுறையை பின்பற்ற உள்ளன’ என்றாா்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.