WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 23, 2023

2016-21-ல் தமிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை: சிஏஜி ரிப்போர்ட்.

 

தமிழகத்தில் 2016 - 2021 வரையிலான காலக்கட்டத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருந்தது; ரூ.2400 மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் திறமையற்ற செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டது என சிஏஜி அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

2016 - 2021 வரை தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை வெள்ளிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14.76 சதவீதம் குறைந்துள்ளது.

  • அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11.84 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2,133 குடியிருப்புகளில் 5 கி.மீ சுற்றளவில் மேல் நிலைப் பள்ளிகளில் இல்லாமல் இருந்துள்ளது.

  • 1,926 குடியிருப்புகளில் 8 கி.மீ சுற்றளவில் உயர் நிலைப்பள்ளிகளில் இல்லாமல் இருந்தது.
  • தரம் உயர்த்தப்பட்ட 528 பள்ளிகளில் 515 பள்ளிகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

  • தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர்கள் இல்லை.

  • மாநில அளவில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது.

  • இதன் காரணமாக திறந்த வெளியிலும், மரங்களின் நிழலிலும் வகுப்புகள் நடத்தப்பட்டது.
  • தற்போது வகுப்பறைகள் கட்டப்படும் வேகத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் கூட இந்த இடைவெளி குறையாது.

  • கட்டிட உரிமங்கள், சுகாதார சான்றிதழ்கள், தீ பாதுகாப்பு சான்றதழ்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்கி வந்தன.

  • ரூ.2400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் திறமையற்ற செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.