வரும் கல்வி ஆண்டுக்கு அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக்கோரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை பள்ளிக்கல்வித் துறை முன்னெடுக்க உள்ளது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்றுமுதல் (ஏப்.17) தொடங்குகிறது. மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8.45 மணிக்கு நடைபெறுகிறது.
வரும் கல்வியாண்டின் (2023-24) முதல் மாணவர் சேர்க்கை இப்பள்ளியில் பள்ளிக்கல்வி அமைச்சர் முன்னிலையில் நடைபெறுகிறது. அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர்கொடியசைத்துத் தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது ஜூன் மாதத்தில்தான் நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாகத் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் ஏப்ரல் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை தொடங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.