கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்(RTE) படி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் அருகமையில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு 25% இலவச கல்வி வழங்க வேண்டும். அதனடிப்படையில் ஆண்டுதோறும் இந்த 25% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் அட்மிஷன் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 1.50 லட்சம் அட்மிஷன்..
தமிழ்நாடு முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் 1,50,000 இடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பள்ளிகளில் 2023-24ம் கல்வியாண்டின் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடங்க உள்ளது.ற்று வருகிறது.
கல்வியாண்டு 2023-2024..
நடப்பு கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகள் வருகின்ற ஏப்ரல் 20ம் தேதி துவங்க இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை பள்ளியில் சேர்க்க சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானவரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தயாராக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.