WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 4, 2023

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் பணி வரன்முறை மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கை ஆசிரியர் தினத்தில் நிறைவேறுமா

 

தமிழகத்தில் உள்ள  164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் காலை மாலை என இரு சுழற்சி முறையில் 7350  கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு  மாத ஊதியமாக  20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது  தமிழகத்தில் பணியாற்றும் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியம் மிக மிக குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இது சம்பந்தமாக தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் நிறுவனரும் மாநில தலைவருமான தங்கராஜ் தெரிவித்ததாவது
தமிழகத்தைப் பொறுத்தவரை உயர் கல்வித் துறையில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளது. முந்தைய ஆண்டு நிலவரப்படி உயர் கல்வி பயிலும் மாணவர் சேர்க்கை விகிதத்தில்( Gross Entrollment Ratio) 51.4 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 66.1 சதவீதத்துடன்  உள்ளது . தேசிய மாணவர் சேர்க்கை விகிதம் 27.1% அதுமட்டுமில்லாமல் புதிய கல்விக் கொள்கையின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆன இலக்கு  2030 ஆண்டிற்குள் 50% என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ஆனால் இந்த இலக்கினை பத்தாண்டுகளுக்கு முன்பாகவே தமிழகம் போன்ற மாநிலங்கள் அடைந்து விட்டன என்பது பெருமைக்குரிய செய்தி. இதற்கு காரணம் மாறி மாறி ஆண்ட அரசுகள் கிராமங்களை மையமாக வைத்து புதிய கல்லூரிகளை தொடங்கி உள்ளன. தற்போதைய சூழ்நிலையில். ... கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . ஆனாலும் கூட அரசு கல்லூரி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 60 சதவீதமான பணியிடங்கள் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போன்ற தற்காலிக பணியாளர்களை வைத்து நிரப்பப்பட்டு உள்ளதாலும் இந்தியாவிலேயே தமிழகம் குறைந்த ஊதியத்தை தற்காலிக பணியாளர்களுக்கு வழங்குவதாலும் தரமான கல்வியை வழங்க முடியாமல் இந்திய கல்வித்தரத்தில் 27 வது இடத்தில் பின்தங்கி உள்ளது.
இது சம்பந்தமாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழக அரசுக்கும் தமிழக உயர் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து கோரிக்கைகளை மனுக்கள் மூலமாகவும் போராட்டத்தின் மூலமாகவும் வழக்குகள் மூலமாகவும் அளித்து வருகின்றனர். ஆயினும் இதுவரை உரிய சம்பளத்தையும்  உரிமைகளையும் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அரியானா மாநிலத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று சம வேலைக்கு சம ஊதியம் 57700  அல்லது பிற மாநிலங்களில் ஏழாவது ஊதிய குழுவின் படி வழங்கப்படுகின்ற யுஜிசி பரிந்துரைத்த  மாத சம்பளம் 50,000 ரூபாய் வழங்க முன்வர வேண்டும். தனியார் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றும் விரிவுரையாளர்களுக்கு அளிக்கப்படுகின்ற சலுகைகளை போன்று அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பி எச் டி போன்ற பட்டப்படிப்புகளுக்கு நெறியாளராக இருக்க அனுமதி தர வேண்டும். அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு சீனியாரிட்டி கணக்கிடுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் கௌரவ விரிவுரையாளர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் குறையும். குறிப்பாக மகளிர் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதேபோன்று வியாசர்பாடி போன்ற கல்லூரிகளில் அண்ணாமலை மிகை  பேராசிரியர்களால் நடந்த தமிழகத்தில் கௌரவ விரிவுரையாளருக்கு சரியான சினியாரிட்டி முறை பின்பற்றப்படாததால் கடலூர் கல்லூரியில் இருந்து  நான்கு கல்லூரிகளுக்கு இடமாறுதல் அடைந்த கலைகந்தன் என்ற  கௌரவ விரிவுரையாளரின்  மரணம் ஏற்பட்டிருக்காது.  இதனால்  கௌரவ விரிவுரையாளர்களுக்கும் கல்லூரியில் நிரந்த பணியாளருக்கும் இடையே ஒரு சில கல்லூரிகளில் ஏராளமான கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. ஏராளமான மகளிர் கௌரவ விரிவுரையாளர்கள் வெளியில் சொல்ல இயலாத பாலியல் ரீதியான துன்புறுத்தலை சந்தித்து வருகின்றனர் என்பதனை ஊடகத்தின் செய்திகள் வாயிலாக தெரிய முடிகிறது. வழங்கப்படுகின்ற குறைந்த ஊதியத்தாலும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு இழைக்கப்படுகின்ற சமூக அநீதியாலும்  திணிக்கப்படுகின்ற தேவையற்ற பணிச்சுமையாலும் ஒரு சில கௌரவ விரிவுரையாளர்கள் பணி வாய்ப்பினையும் உயிரையும் துறந்துவிட்டனர்.  இனி வரும் காலங்களில்  அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் அடிப்படை கோரிக்கைகளான  கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வு மற்றும்  பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்களும் மற்றும் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களும் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் உயர்திரு உயர் கல்வித் துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர்  அதிகாரிகளும்   விரைந்து பரிசீலனை செய்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.