நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டில் உயர்கல்வி சேர்க்கைக்கான 'நீட்' மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வுகள் நடக்க உள்ளன.
இந்த தேர்வுகளை எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விபரம்:
நீட் தேர்வு பயிற்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வியின் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனரகம் மேற்கொள்ளும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தனியாக வினாத்தாள் தயாரித்து தினசரி தேர்வுகள் நடத்தப்படும்.
ஆன்லைன் வழியிலும் பாடங்கள் நடத்தப்படும். அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கும்.
ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்துக்கும் தலா நான்கு ஆசிரியர்கள் வீதம் மாநில அளவில் 20 ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவர். அனைத்து வேலை நாட்களிலும் மாலை 4:00 முதல் 5:30 மணி வரை பள்ளிகளிலேயே பாட வாரியாக வகுப்புகள் நடக்கும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.