
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது முக்கியமாக இருக்கிறது. ஏப்., மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்வு நடக்கலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வை பொறுத்தவரை, செய்முறைத் தேர்வு முடிந்து, சிறு இடைவெளிக்குப் பிறகு பொதுத்தேர்வை துவங்க வேண்டி உள்ளது. ஜன., மாதம் திருப்புதல் தேர்வு நடத்த வேண்டி உள்ளது. டிச., மாதத்துக்குள் அரையாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் முடிக்க வேண்டிய பணிகள் வேகமாக நடந்து கொண்டுள்ளது.
எனவே, பொதுத்தேர்வுக்கான தேதியை முன்கூட்டியே அறிவித்தால்தான் மாணவர்களும் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும். எனவே தீபாவளி முடிந்த பின்னர் பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு கட்டாயம் வெளியாகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.