இந்தியாவை சேர்ந்த டாக்டர். ஆர். அரவிந்த் குமார் அவர்கள் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டதில் S.M.H ராணிப்பேட்டை மற்றும் (SIH-R & LC), கரிகிரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றினார். 2013-ம் ஆண்டு முதுகலை படிப்பதற்காக ஐரோப்பா சென்றார்.
அவர் தனது இருதயவியல் பயிற்சி மற்றும் இதய செயலிழப்பு பெல்லோஷிப்பை ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் லண்டன், இங்கிலாந்தில் உள்ள ராயல் ப்ரோம்ப்டன் மருத்துவமனையில் நிரைவு செய்தார்.
EAPCI விருது 40 வயதிற்குட்பட்ட இருதயநோய் நிபுணர்களுக்கு மற்றும் குடிமக்கள் அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளில் நிரந்தரமாக வசிப்பவர்கள் அல்லது ESC உடன் இணைந்த இருதயவியல் சங்கங்கள் வழங்கபடும்.
ஜெர்மனியின் சார்பாக அவர் இந்த மதிப்புமிக்க விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 13 நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஜெர்மனியில் வசிக்கும் வெளிநாடு வாழ் தமிழருக்கும் ( வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர்) கிடைத்துள்ளது பெருமை அளிக்கக்கூடிய நிகழ்வாக உள்ளது. இதற்காக இவர் 25000 யூரோவை பரிசுத்தொகையாக பெருவார். இதன் மூலம் அவர் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர் மற்றும் ஸ்ட்ரக்சுரல் நடைமுறைகளில் பயிற்சி பெறுவார்.
டாக்டர். அரவிந்த், இருதய நோய்கள், HTN, DM மற்றும் Covid ஆகியவற்றைப் பொது சுகாதார கல்வியறிவு, ரோட்டரி கிளப், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, SRFO மற்றும் "லெட்ஸ் ஃபோகஸ் ஹெல்த் குரூப் அண்ட் ஹார்வெஸ்ட் ஃபவுண்டேஷனுடன் நமது சமுதாயத்திற்காக பல ஆராய்ச்சி கட்டுரைகளையும் சொற்பொழிவுகளையும் மற்றும் வலைதிரையிடல் மற்றும் மருத்துவ முகாம்களை பலவற்றை நடத்தியுள்ளார் என தெரிய வருகிறது".
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.