மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் 2.40 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு sarvashikshaabhiyan.org என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய கல்வி அமைச்சகம் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது ஆசிரியர், லேப் டெக்னீசியன், பியூன் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 2 லட்சத்து 40 ஆயிரத்து 61 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.22,700 முதல் அதிகபட்சமாக ரூ.43,300 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க பிப்ரவரி 25ம் தேதி கடைசி நாளாகும்.
மத்திய அரசின் கல்வி திட்டங்களில் ஒன்று சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan). அதாவது அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற பெயரில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6 வயது முதல் 14 வயது நிரம்பிய அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்நிலையில் தான் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் 2.40 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தொடக்க ஆசிரியர் (Primary Teacher) பணிக்கு 98,305 பேர், லேப் டெக்னீசியன் பணிக்கு 18,650 பேர், பியூன் (Peon) பணிக்க 24,300 பேர், கார்யாலயா ஸ்டாப் (Karyalaya Staff) பணிக்கு 25,964 பேர், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு 72,842 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்
சர்வ சிக்ஷா அபியான் பணியிடங்களுக்கான வயது வரம்பு: தொடக்க ஆசிரியர், லேப் டெக்னீசியன் பணிகளுக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். கார்யாலயா ஸ்டாப் பணிக்கு 42 வயதுக்குள்ளும், கம்யூட்டர் ஆசிரியர் மற்றும் பியூன் பணிகளுக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வ சிக்ஷா அபியான் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி: இந்த பணிகளுக்கு 8 ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். தொடக்க ஆசிரியர் பணிக்கு டிகிரி, லேப் டெக்னீசியன் பணிக்கு, கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ கம்ப்யூட்டர் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பியூன் பணிக்கு 8 ம் வகுப்பும், கார்யாலயா பணிக்கு 10, 12ம் வகுப்பும் படித்திருக்க வேண்டும். மாத சம்பளம்: இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் மாத சம்பளமாக ரூ.22,700 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.43,300 வரை வழங்கப்படும். பணி வாரியாக பார்த்தால் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு ரூ.43,300 சம்பளம் வழங்கப்படும். லேப் டெக்னீசியன் பணிக்கு மாதம் ரூ.39,500, கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு ரூ.37,700, கார்யாலயா ஸ்டாப் பணிக்கு மாதம் ரூ.33,500, பியூன் பணிக்கு ரூ.22,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் sarvashikshaabhiyan.org இணையதளம் மூலம் பிப்ரவரி 25ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.980 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். கடைசி நாள்: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 25ம் தேதி கடைசி நாளாகும். இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு sarvashikshaabhiyan.org என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( https://bookmarking.tamilbm.com/register ) திரட்டியிலும் இணையுங்கள்.
ReplyDelete