அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Secondary Grade Teacher. மொத்த காலியிடங்கள்: 1768.
சம்பளம்:ரூ.20,600-75,900.
வயது: 1.7.2024 தேதியின்படி பொதுப் பிரிவினர் 53 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/ மிகவும் பிற்பட்டோர்/ முஸ்லிம் மற்றும் ஆதரவற்ற விதவைகள் 58 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் பணிக்கான தொடக்கக் கல்வி பாடத்தில் 2 வருட டிப்ளமோ அல்லது என்சிடிஇ யில் அங்கீகரிக்கப்பட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான தொழிற்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் தமிழக அரசால் நடத்தப்படும் TN-TET தாள்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆப்ஜக்டிவ் கேள்விகளை கொண்ட எழுத்துத் தேர்வு மற்றும் TN-TET Paper-I தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ஜூன் 23ம் தேதி தேர்வு நடைபெறும்.
கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.3.2024.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.