ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளதாக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்.1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 22 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதனைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு வரும் 25 ஆம் தேதி முடிவடைகிறது. மேல்நிலை வகுப்புகளுக்கான தேர்வுகள் முடிவடையும் நிலையில் 26 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தொடங்க உள்ளது.
இந்நிலையில் தேர்வுகள் முடிவடைந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளதாகவும் அதற்கான தேதிகளையும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியிருப்பதாவது;' 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த பின் தேர்வுத்தாள்கள், விடைத்தாள்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி மண்டலத்திற்கு கொண்டு வரப்பட்டு மண்டலங்களுக்குள் விடைத்தாள்களை மாற்றும் பணி மார்ச் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும். அதன் மண்டலங்களில் இருந்து விடைத்தாள் திருத்தும் இடங்களுக்கு மார்ச் 28 ஆம் தேதி கொண்டு செல்லப்படும். முதன்மை விடைத்தாள் திருத்தும் அலுவலர், கூர்நோக்கு அலுவலர் சோதனை அடிப்படையில் ஏப்ரல் 1 ஆம் தேதி பரிசோதனை செய்த பின், விடைத்தாள்கள் திருத்தும் பணியினை ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் மேற்கொள்வர்.
இதேபோல 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த பின் தேர்வுத்தாள்கள் விடைத்தாள்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து மார்ச் 30 ஆம் தேதி மண்டலத்திற்கு கொண்டு வரப்பட்டு விடைத்தாள்களை மாற்றும் பணி மார்ச் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடைபெறும். அதன் மண்டலங்களில் இருந்து விடைத்தாள் திருத்தும் இடங்களுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதி கொண்டு செல்லப்படும், முதன்மை விடைத்தாள் திருத்தும் அலுவலர், கூர்நோக்கு அலுவலர் ஆகியோரின் சோதனை அடிப்படையில் ஏப்ரல் 15 ஆம் தேதி பரிசோதனை செய்த பின், விடைத்தாள்கள் திருத்தும் பணியினை ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் மேற்கொள்வர்.
இதேபோல பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்கள் அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் ஏப்ரல் 10 ஆம் தேதி காலை 7 மணிக்கு சேகரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும். முதன்மை விடைத்தாள் திருத்தும் அலுவலர், கூர்நோக்கு ஆய்வாளர் ஆகியோரின் சோதனை அடிப்படையில் பரிசோதனை செய்த பின், அடுத்ததாக ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 8 நாட்கள் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்வார்கள். ஆன்லைன் வழியில் 13 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மதிப்பெண்கள் பதிவேற்றப்படும்.
இதில் கடந்த முறை தேர்வில் வெற்றி பெறாமல், இந்த முறை தேர்வு எழுதிய அரியர் தேர்வுகளின் தேர்வு தாள்கள் முதன்மை விடைத்தாள் திருத்தும் அலுவலர், கூர்நோக்கு அலுவலர் சோதனை அடிப்படையில் ஏப்ரல் 6 ஆம் தேதி பரிசோதனை செய்த பின், இதற்கு கூடுதலாக ஒரு முதன்மை விடைத்தாள் திருத்தும் அலுவலர் இருப்பார். விடைத்தாள்கள் திருத்தும் பணியினை ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் மேற்கொள்வர்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.