வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு படிக்கும் வகையிலான பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.கடந்த 2020-ம் ஆண்டில் மத்திய கல்வி அமைச்சகம் தேசிய கல்விக் கொள்கையை (என்இபி) அறிமுகம் செய்தது. மத்திய அரசின் அந்தப் புதிய கல்வி கொள்கையின்படி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், பல்வேறு புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்த வகையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பு உள்பட பல்வேறு துறை படிப்புகளில், வரும் கல்வி ஆண்டில், நான்கு ஆண்டு பட்டப்படிப்புகள் துவங்கப்படுகின்றன.
இதில் ஏற்கெனவே பி.எட் படிப்புகள் 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில், மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., சார்பில், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், மூன்று ஆண்டு பட்டப்படிப்பு, இரண்டு ஆண்டு படிப்பு போன்றவற்றில் நடப்பு கல்வியாண்டில் படித்து கொண்டிருப்போர், புதிதாக துவங்கப்பட உள்ள, நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் சேர விரும்பினால், அவர்கள் ஏற்கனவே படித்த காலத்தை கணக்கிட்டு, அப்படியே, நான்கு ஆண்டு படிப்புக்கு மாறி கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையில் மாணவ, மாணவிகள் கேட்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.