தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், மார்ச் 20 வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://trb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 1,768 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளையுடன் (மார்ச் 15) முடிவடைகிறது. இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 20 வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் மார்ச் 21 முதல் 23-ம் தேதி மாலை 5 மணி வரை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியை மாற்றம் செய்ய முடியாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://trb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம் என்றும் டிஆர்பி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.