WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 13, 2024

பிளஸ்-2 வேதியியல் தேர்வு எளிதாக இருந்தது: தேர்வெழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி.

 







பிளஸ்-2 வேதியியல் வினாத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேதியியல் கணக்குப் பதிவியியல் தேர்வுகள் நடைபெற்றன.



வேதியியல் தேர்வெழுதிய மாணவர்கள் கூறும்போது, ``வேதியியல் வினாத்தாளில் நன்கு தெரிந்த வினாக்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. ஒரு மதிப்பெண் பகுதியில் அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்தன. 2 மற்றும் 5 மதிப்பெண் பகுதியில் தலா ஒரு கேள்வி மட்டும் சற்று யோசித்து பதிலளிக்கும்படி இருந்தது. நல்ல மதிப்பெண் கிடைக்கும் என நம்புகிறோம்'' என்று தெரிவித்தனர்.


கணக்குப் பதிவியியல் தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகையில், மறைமுக வினாக்கள் எதுவும் கேட்கப்படவில்லை; பருவத் தேர்வுகளில் இடம்பெற்றிருந்த சில வினாக்களே மீண்டும் கேட்கப்பட்டிருந்தன. இந்த வினாத்தாளில் 100-க்கு 100 மதிப்பெண் எடுக்கலாம் என்றனர்.

இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய தேர்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.அனைத்து தேர்வுகளும் வரும் 22-ம் தேதியுடன் முடிவடைகின்றன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.