WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 2, 2024

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம் | மொழிப்பாட தேர்வு எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி.

பிளஸ் 2 வகுப்புக்கான மொழிப் பாடத்தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரி வித்தனர்.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங் கியது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.


இந்தத் தேர்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,302 மையங்களில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். சென்னையில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.மாணவர்கள் தீவிர பரிசோதனைக் குப் பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சென்னை திருவல்லிகேணியில் உள்ள பள்ளியில் நேரில் ஆய்வுசெய்தார். அதன்பின் மாணவர் களிடம் நன்றாகத் தேர்வு எழுதுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

இதற்கிடையே, தமிழ் பாடத் தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சராசரி மாணவர்கள்கூட நல்ல மதிப்பெண் பெற முடியும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆங்கிலப் பாடத்தேர்வு 5-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு மார்ச் 22-ம் தேதியுடன் முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

13,407 மாணவர்கள் ‘ஆப்சென்ட்’: மொழிப்பாடத் தேர்வில் பள்ளிமாணவர்கள் 12,364 பேரும், தனிதேர்வர்கள் 1,043 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்து 407 பேர் ‘ஆப்சென்ட்' ஆகியுள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.