WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 6, 2024

பிளஸ் டூ ஆங்கில தாள்; தொடக்கமே ஷாக். 2 பொது அறிவு வினாக்கள் வேறு; மாணவர்கள் கூறுவது என்ன?

மிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று (மார்ச் 5) நடைபெற்ற ஆங்கிலத் தாள் எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 29 முதல் மார்ச் 22 வரை நடைபெறுகின்றன. இந்தநிலையில், இன்று ஆங்கில தாள் நடைபெற்றது.

12 ஆம் வகுப்பு ஆங்கிலத் தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். மாணவர்களுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. 20 ஒரு மதிப்பெண்கள் வினாக்கள் கிட்டத்தட்ட 10 வினாக்கள் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்திற்கு வெளியே கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் தேர்வு ஆரம்பித்த சிறிதுநேரத்திலே ஷாக் ஆகி விட்டனர்.

மற்ற வினாக்கள் ஆவரேஜ் அளவில் இருந்தது. ஒரளவுக்கு எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கும் வகையில் மாணவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

இதனையடுத்து மாணவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சியாக, பொது அறிவு தொடர்பாக இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று உங்கள் கண்களை பாதுகாப்பது என்பது பற்றி சிறு குறிப்பு எழுத கேட்கப்பட்டிருந்தது. கண்களை பாதுகாப்பது பற்றிய விடை தெரிந்திருந்தாலும், தமிழ் வழி மாணவர்கள் வாக்கியங்களாக சற்று திணறியிருக்கலாம்.

அடுத்ததாக மாணவர்கள் செய்திகளை எப்படி கவனிக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளும் வகையில், அண்மையில் படித்த செய்தியைப் பற்றி சிறுகுறிப்பு எழுத கேட்கப்பட்டிருந்தது. பொதுவாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் செய்தித் தாள்களை பெரிதாக படிப்பதில்லை. அதிலும் தேர்வுக் காலம் நெருங்கி வரும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுத்தமாக செய்தித் தாளையோ, ஊடகங்களையோ பார்ப்பதில்லை. இதனால் எந்தச் செய்தியை எழுதலாம், உள்ளூர் செய்தியை எழுதினால் போதுமா? அல்லது தேசிய அல்லது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை எழுதினால் தான் அதிக மதிப்பெண் கிடைக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கும். இதனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையளிக்க மாணவர்கள் சற்று திணறினர். இவ்வாறு மாணவர்களும் நிபுணர்களும் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.