தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரகமானது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வழங்கப்படும் நடைமுறை மாற்றப்பட்டதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை "எண்ணும் எழுத்தும்" என்னும் பாடத்திட்ட முறை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க குறிப்பிட்ட கால இடைவெளிகளில் 3 கட்ட பருவத் தேர்வுகள் வாயிலாக வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் நடப்புக் கல்வியாண்டுக்கான 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு விரைவில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இத்தேர்வு குறித்த புதிய அறிவிப்பை தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரகமானது தற்போது வெளியிட்டுள்ளது.
இதன் படி, இப்பருவத் தேர்வுக்கான வினாத்தாள்களை பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பும், இத்தேர்வை சரியாக நடத்துவதற்கான பொறுப்பும் வட்டாரக் கல்வி அலுவலகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான வினாத்தாள்களை (BEO) Login மூலமாக பதிவிறக்கம் செய்து மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை அந்தந்த வட்டார வள மையங்களில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு அச்சிடும் பணியினை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு 38 மாவட்டங்களுக்கு வினாத்தாள்களை அச்சிடும் பணிக்காக ரூ.2,43,60,453 -ஐ அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.