'இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் குறைந்தது 35 சதவீத பள்ளிகள் ஐம்பது அல்லது அதற்கும் குறைவான மாணவர்களையும், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களையும் கொண்டிருக்கின்றன' என்று பி.ஆர்.எஸ்., லெஜிஸ்லேட்டிவ் ரிசர்ச் எனும் அறிக்கை தெரிவிக்கிறது.
பொதுவாக, குறைவான ஆசிரியர்களைக் கொண்ட சிறிய பள்ளிகள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன. ஆசிரியர்கள் தங்கள் நேரத்தின் பெரும்பகுதியை நிர்வாகப் பணிகளில் செலவிடுவதால் கற்பித்தல் பாதிக்கப்படுகிறது. 2022-23 நிலவரப்படி, 1-8 வகுப்புகளுக்கான 16 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜார்கண்ட் (40 சதவீதம்), பீகார் (32 சதவீதம்), மிசோரம் (30 சதவீதம்) மற்றும் திரிபுராவில் (26 சதவீதம்) காலியிடங்கள் கணிசமாக அதிகமாக உள்ளன.
2023-24ம் ஆண்டு நிலவரப்படி, ஆரம்பநிலை முதல் மேல்நிலை வரையிலான ஆசிரியர்களில் சுமார் 12 சதவிகிதம் பேர் உரிய கற்பித்தல் தகுதியைக் கொண்டிருக்கவில்லை. 48 சதவிகித 'பிரி-பிரைமரி' ஆசிரியர்கள் தகுதியற்றவர்கள்', என்று அந்த அறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.