WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, March 4, 2024

நீட்: பள்ளி செல்லாமல் பயிற்சி நிலையம் செல்லும் மாணவர்கள் - சிபிஎஸ்இ பள்ளிகளில் என்ன நடக்கிறது?

 



இந்தியாவில் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இரண்டு ஆண்டுகளும் பள்ளிக்குச் செல்லாமல், பாடங்களைப் படிக்காமல், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்குத் தயாராவதற்காகப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதாக சி.பி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


சி.பி.எஸ்.இ பள்ளிகளும் பயிற்சி மையங்களும் இதற்கென தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு, அம்மாணவர்கள் பொதுத்தேர்வில் மட்டும் கலந்துகொள்ளும் வண்ணம் போலியாக அவர்களுக்கு வருகைப்பதிவும் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


நுழைவுத்தேர்வுகளுக்கு அதிகரித்து வரும் முக்கியத்துவத்தால் பள்ளிப் படிப்புக்கான தேவை குறைந்து வருவதாகவும் இதனால், மாணவர்களிடையே கற்றல் செயல்பாடு வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.




மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் (சி.பி.எஸ்.இ) இந்தியா முழுவதும் 24,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் சுமார் 30க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளிஅந்த ஆய்வில், 23 பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அந்த இரண்டு ஆண்டுகளும் பள்ளிக்குச் செல்லாமல், நீட், ஜே.இ.இ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் பயிற்சி மையங்களுக்கு அனுப்பப்படுவதாக, ‘தி டெலிகிராஃப்’ இணையதளத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.களில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சி.பி.எஸ்.இ ஆய்வு செய்தது.







23 பள்ளிகளுக்கு நோட்டீஸ்


சி.பி.எஸ்.இ பள்ளிகளைப் பொறுத்தவரை, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு குறைந்தது 75% வருகைப்பதிவு இருத்தல் அவசியம். பயிற்சி வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு பள்ளிகளே போலியாக வருகைப்பதிவை உருவாக்குவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இந்த ஆய்வுக்குச் சென்ற, டெல்லியில் இயங்கிவரும் தனியார் பள்ளியொன்றின் முதல்வர், தான் ஆய்வுக்குச் சென்ற பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் ஒவ்வொன்றிலும் 60 மாணவர்கள் மட்டுமே இருந்ததாகவும் இந்த எண்ணிக்கை 11, 12ஆம் வகுப்புகளில் 500ஐ தாண்டியதாகவும் தெரிவித்ததாக, ‘தி டெலிகிராஃப்’ இணையதளம் மேற்கோள் காட்டியுள்ளது.


ஆனால், 11, 12ஆம் வகுப்புகளுக்கு நேரடியாகச் சென்று பார்த்தபோது, 11ஆம் வகுப்பில் மாணவர்கள் ஒருவர்கூட வகுப்புக்கு வரவில்லை எனவும் 12ஆம் வகுப்பில் 50 பேர் மட்டுமே இருந்ததாகவும் அவர் அதில் தெரிவித்திருக்கிறார்.


இந்த விவகாரம் தொடர்பாக, 23 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட பள்ளிகளில் பல, சீரற்ற முறையில் (ரேண்டம்) தேர்ந்தெடுக்கப்பட்டதால், அனைத்துப் பள்ளிகளுக்கும் இதைப் பொருத்திப் பார்க்க முடியாது.

நுழைவுத்தேர்வு மட்டும்தான் தகுதியா?


பிரின்ஸ் கஜேந்திரபாபு


மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு, ஐஐடி/என்.ஐ.டி போன்ற மத்திய அரசின் நிதியுதவி பெறும், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட/நிதியளிக்கப்பட்ட முதன்மை கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான ஜே.இ.இ. எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு, சி.யூ.இ.டி எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு உட்பட பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாலும் பள்ளிப் படிப்பின் மீதான முக்கியத்துவம் குறைவதுமே இதற்குக் காரணம் என, கல்வியாளர்கள் பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.


பத்தாம் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரை பள்ளி நிர்வாகமே சமாதானம் செய்து இவ்வாறு நேரடியாக பயிற்சி மையங்களுக்கு அனுப்புவதாகவும் அந்த மையங்களிலேயே அவர்களுக்கு 11, 12ஆம் பாடத்திட்டம் கற்றுக் கொடுக்கப்படும் என பள்ளிகள் கூறுவதாகவும் கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம், அப்பயிற்சி மையங்கள் அதிகளவு லாபம் ஈட்டுவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.


கலை, அறிவியல் பிரிவுகள் முதல் மருத்துவம், பொறியியல் என அனைத்து உயர் கல்விக்கும் நுழைவுத்தேர்வில் மதிப்பெண்கள் பெற்றால் போதும், பள்ளிப்படிப்பு முக்கியமில்லை என்பதாலும் கல்லூரிக்குச் செல்வதற்கான அடிப்படைத் தகுதிதான் பிளஸ் 2 வகுப்பு என்ற மனநிலை பெற்றோர், மாணவர்கள் மத்தியில் இருப்பதாலேயே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு இதுகுறித்துக் கூறுகையில், “இது திடீரென நடக்கவில்லை, நீட் அறிமுகமானதில் இருந்தே நடக்கிறது. பள்ளிப்படிப்பு மதிப்பெண்ணை வைத்து இனி உயர் கல்வியில் சேர முடியாது. நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் தகுதி எனச் சொல்லிவிட்டார்கள். அப்படியிருக்க மக்கள் எதில் கவனம் செலுத்துவார்கள்?” எனக் கேட்கிறார்.


இதனால் மாணவர்களின் கற்றல் செயல்பாடு பெருமளவு குறையும் எனக் கூறும் பிரின்ஸ், தன்னம்பிக்கை, மனித உரிமை, பெண்ணுரிமை, சூழலியல் உரிமை, அரசமைப்பு சட்டம் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு குறையும் எனத் தெரிவித்தார்.




No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.