டெட் தேர்வில் மீண்டும் பழைய முறையைக் கடைப்பிடிப்பது என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) முடிவு செய்துள்ளது. இதனால் டெட் தேர்வு எழுதும் தேர்வர்கள் குஷியடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பி வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படும் டெட் தேர்வு மூலம் தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் இந்த தேர்வானது தாள்-1, தாள்-2 (Paper I, Paper II) என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். Paper 1 ஆனது இடைநிலை ஆசிரியர்களுக்காகவும், Paper II ஆனது பட்டதாரி ஆசிரியர்களுக்காகவும் நடத்தப்படும்.
இந்நிலைியல் இத்தகைய டெட் தேர்வானது ஆரம்பத்தில் 3 மணி நேரத்திற்கு 150 மதிப்பெண்களுக்கு ஓஎம்ஆர் ஷீட் தேர்வு முறைப்படி நடைபெற்றது.
பிறகு இத்தேர்வானது 2022-ம் ஆண்டு முதல் கணினி வழித்தேர்வு முறைக்கு மாற்றப்பட்டது. இதில் கணினி மூலம் தேர்வர்களின் விடைகள் பெறப்பட்டு திருத்தம் செய்யப்படும். இதனை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் மீண்டும் ஓஎம்ஆர் ஷீட் முறைப்படியே டெட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இம்முறையானது வருகின்ற ஜூலை மாதம் நடைபெறவுள்ள டெட் தேர்வு முதலே நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓஎம்ஆர் ஷீட் முறைப்படி இனி டெட் தேர்வு நடைபெறும் என்பதால் தேர்வர்கள் குஷியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.