தமிழக பள்ளிக்கல்வித்துறை முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து, அதில் நடிகர் விஜய் நடித்த படத்தின் காட்சிகளை ஓடவிட்டுள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் முகநூல், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் கணக்குகள் உள்ளன.அதில், கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், அதன் முகநூல் பக்கத்தை மட்டும் மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களை கொண்ட பள்ளிக்கல்வித் துறையின் முகநூல் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள், நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ஹிந்தி டப்பிங் காட்சிகளை பதிவேற்றியுள்ளனர். இதனால் அரசுத்துறை நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.