மேல்நிலை அறைத்தேர்வு கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் ஆசிரியர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய இணை இயக்குநரை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு அறைக்கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இணை இயக்குநர் பொன்னையா ஆசிரியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஒருமையில் ஆசிரியர்களை பேசியுள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளுக்கு துணை போவார்கள் என்ற தோற்றத்தினை உருவாக்கும் விதத்தில் வெளி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் உள்ளடக்கிய பறக்கும் படையினரை நியமனம் செய்துள்ள இணை இயக்குநரை கண்டித்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் போராட்டங்கள் நடக்கிறது.முதுகலை ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.