WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 3, 2024

ஜவஹர் நவோதயா பள்ளிகளில் பணிபுரிய ஆசை இருக்கா...!!

மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டு வரும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பிரிவில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான அறிவிப்பை நவோதயா வித்யாலயா பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு navodaya.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
சுருக்கமாக ஜஎன்வி என்று அழைக்கப்படும் ஜவஹர் நவோதயா பள்ளி (Jawahar Navodaya Vidyalaya - JNV) திறன்வாய்ந்த மாணவர்களுக்குச் சிறப்புக் கல்வி வழங்கும் விதத்தில் மத்திய அரசினால் உருவாக்கப்பட்ட பள்ளிகளாகும். இது மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலய சமிதி என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது. தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளிகளுக்கு இணையான தரம் கூடியக் கல்வித்திட்டத்தைச் சிறிய கிராமங்களைச் சேர்ந்த சிறார்களும், அவர்களது குடும்ப வருமானம், சமூகநிலை எத்தகையதாக இருப்பினும், பெற்று பயன்பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டு சிறப்பாக அமலாக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையான பள்ளிகள் தமிழகத்தைத் தவிர்த்து நாட்டின் பல இடங்களில் சிறப்பாக அமைந்து அருமையாக நடத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் தற்போது ஏறத்தாழ 600 பள்ளிகளுக்கும் மேல் நிறுவப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் நடத்தப்படும் அனைத்திந்திய நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்குப் பல்துறை திறன்களிலும் கல்வி இந்த நவோதயா பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஜவஹர் நவோதயா பள்ளிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பின் கீழ் திறமையாக செயல்பட்டு வருகின்றன. மேலும் இவை, மாவட்டத்தின் மாதிரி பள்ளிகளாகவும் செயல்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகள் இரு பாலரும் தனித்தனி விடுதிகளில் தங்கிப் பயிலும் வகையில் இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளஇ. இந்தப் பள்ளிகளில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய கல்வித்திட்ட முறையில் (சிபிஎஸ்இ) பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இலவச கல்வியுடன் உணவு, உடை, உறைவிடம், சீருடை, காலணிகள், புத்தகங்கள், எழுது பொருட்கள், எல்லா பொருட்களும் வழங்குவதுடன் மருத்துவமும் இலவசமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவ, மாணவியர்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம், அவர்கள் படித்த தாய்மொழியிலேயே, 6-ஆம் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தப் பள்ளிகளில் இந்தி உள்ளிட்ட மும்மொழித் திட்டத்தில் பயிலும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் 10-ம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு இந்திப் பாடமானது கட்டாயமாக்கப்படவில்லை. தற்போது இந்தப் பள்ளிகளில் மெஸ் உதவியாளர் 442, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 360, எலக்ட்ரீசியன் கம் பிளம்பர் 128, ஆய்வக உதவியாளர் 161, நர்ஸ் 121, கேட்டரிங் சூப்பர்வைசர் 78, ஸ்டெனோ 23, எம்.டி.எஸ்., 19, ஆடிட் அசிஸ்டென்ட் 12, அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் 5, ஜூனியர் டிரான்ஸ்லேசன் ஆபிசர் 4 உட்பட மொத்தம் 1377 இடங்கள் காலியாக உள்ளன. வயது, கல்வித்தகுதி: பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால் கல்வித்தகுதியும், வயதும் ஒவ்வொரு வேலைக்கும் மாறுபடுகிறது. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் ஆட்கள் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். தேர்வு மையம்: மேலும், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். விண்ணப்பக்கட்டணம்: நர்ஸ் பணிக்கு ரூ. 1,500 விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும். மற்ற பதவிகளுக்கு ரூ. 1000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும்.இதுதவிர எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 500 செலுத்தினால் போதுமானது. கடைசிநாள்: வரும் 30.4.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு navodaya.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.