WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 26, 2024

தமிழகத்தில் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.22 கோடி ஊதிய மானிய நிதி ஒதுக்கீடு: மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் உத்தரவு.

 

பார்வைதிறன், செவித்திறன் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் மொத்தம் 1,009 சிறப்பாசிரியர்கள், தசைப் பயிற்சியாளர்களுக்கு ரூ.21 கோடியே 79 லட்சத்து 44 ஆயிரம் ஊதிய மானியம் நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத்திறனாளிகள் நலஇயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2018-19-ம் முதல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சிறப்பாசிரியர்கள், தசைப்பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி கடந்த 2022-ம் ஆண்டுமே மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

1,009 ஆசிரியர்கள்: அதன்படி, 2024-25-ம் நிதியாண்டில் 299 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் 882 ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.19 கோடியே 5 லட்சத்து 12 ஆயிரம், 36 செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் 107 சிறப்பாசிரியர்களுக்கு ரூ.2 கோடியே31 லட்சத்து 12 ஆயிரம், 7 பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் 20 சிறப்பாசிரியர்களுக்கு ரூ.43 லட்சத்து 20 ஆயிரம் என மொத்தம் 1,009 பேருக்கு 12 மாதங்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் ரூ.21 கோடியே 79 லட்சத்து 44 ஆயிரம் ஊதிய மானியம் நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற பல்வேறு வழிகாட்டுநெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.