தமிழக முழுவதும் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்று 29.1.2025 திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் படி மாத ஊதியம் 50000 மற்றும் பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக வெளியிட்டுள்ள நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த கோரி கௌரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலைக்கல்லூரிகளில் 7360 கௌரவ விரிவுரையாளர்கள் 25000 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையிலே தமிழக உயர்கல்வி துறை தான் குறைந்த சம்பளம் வழங்குகிறது. மற்ற அண்டை மாநிலங்களில் அங்கு பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு நல்ல ஊதியமும் மருத்துவ விடுப்பு விபத்து நிதி போன்றவை வழங்கப்படுகிறது. மாநிலங்கள் கேரளாவில்
43750 ரூபாயும் பாண்டிச்சேரியில் 40000 ரூபாயும் புதுடெல்லியில் 50000 ரூபாயும் மற்றும் ஹரியானாவில் 57700 ரூபாயும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் ஊதிய சான்று கூட வழங்காததால் கௌரவ விரிவுரையாளர்களால் வங்கிகளில் கடன் பெற முடியவில்லை. இதனால் கந்து வட்டி கொடுமைக்கு ஒரு சிலர் ஆளாகின்றனர். இதனால் கௌரவ விரிவுரையாளர்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மக்கள் நலனிலும் மாணவர் நலனிலும் கவனம் செலுத்தும் அரசு கல்லூரி மற்றும் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கிட முன் வர வேண்டும்.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி முன்பு உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் படி கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் 50000 மற்றும் பணி நிரந்தரம் தொடர்பாக 500க்கும் மேற்பட்டவர்கள் வழக்குத் தொடர்ந்து தீர்ப்புகளை பெற்றுள்ளனர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றம் கிளை அளித்துள்ள தீர்ப்புகளை தமிழக உயர்கல்வி அமல்படுத்த கோரி இரண்டாவது நாள் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோ கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். கல்லூரியில் நடைபெற்ற கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு நிரந்தர பேராசிரியர் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய மாணவர் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை உரையாக வேலூர் மண்டல துணைத் தலைவரும் கணிதவியல் துறை தலைவர் ஏழுமலை அவர்களும் சிறப்புரையாக கல்லூரியின் செயலாளரும் வேதியியல் துறை பேராசிரியருமான ரவி அவர்கள் வழங்கினார்கள். இந்திய மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்து கருத்து கருத்துரை வழங்கினார்கள். கௌரவ விரிவுரையாளர்களின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராஜ் முருகன் சந்திரசேகர் குமார் சரவணமுருகன் முனிவேல் சரவணன் முருகன் ராதிகா சஞ்சீவலட்சுமி புவனேஸ்வரி தென்றல் விஷ்ணுவர்தினி மோகன் கருணாநிதி பெருமாள்சாமி பன்னீர்செல்வம் ஏழுமலை சிவா ரங்கநாதன் புவனேஸ்வரி சத்யா சசிகலா ஜெயஸ்ரீ கோகிலா சுகுணா சதீஷ்குமார் கணேசன் சபியுல்லா சுந்தரமூர்த்தி தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.