WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 15, 2024

அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் காலை உணவு திட்டம்.

தமிழகம் முழுதும் உள்ள, 3,995 அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்க திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.


தமிழக அரசின் துவக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, முதல்வரின் காலை உணவு திட்டம், 2022 செப்., 15ல் துவங்கப்பட்டது.

இதையடுத்து, 2023 ஆக., 25ல், திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 30,992 அரசு துவக்கப் பள்ளிகளில், 18.5 லட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். காலை உணவு திட்டத்திற்கு, மாணவர்கள், பெற்றோர் தரப்பில், நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

நடப்பாண்டு பட்ஜெட்டில், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கும், காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளான இன்று, திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

இதன் வாயிலாக, 3,995 அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளிகளில் படிக்கும், 2.23 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளனர். விழாவில், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

'முதல்வரின் காலை உணவு திட்டம் என்பதை, முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டம் என்று பெயர் மாற்ற வேண்டும்' என, சட்டசபையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.

இன்று நடக்கும் விழாவில், பெயர் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.