WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 23, 2023

திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்.

கோடை விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிவைக்கப்படுமா என்கிற எதிா்பாா்ப்பு ஏற்பட்டது.
இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என்றாா். இதனால் அறிவிக்கப்பட்ட தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு ஜூன் 5-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதனிடையே, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் , சீருடைகள் உள்ளிட்டவற்றை பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் பள்ளிக் கல்வித் துறை தீவிரமாகச் செய்து வருகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.