WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 9, 2023

தமிழ் வழி பாட பிரிவுகள் நடத்த தமிழகத்தில் முறையான தகுதி இல்லாத ஆசிரியர்கள். கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு?

 தமிழகத்தில் தமிழ் வழியில் நடத்தப்படுகின்ற பாடப்பிரிவுகளை  பற்றியும் கல்வி தரத்தினை பற்றி தமிழ்நாடு அரசு கல்லூரி  யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர் சங்க தலைவர் முனைவர் தங்கராஜ் தெரிவித்ததாவது
தமிழகத்தில் மொழியை வைத்து மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள்  பலமுறை கோரிக்கை வைத்தும் தாய் வழிமொழி கற்பித்தலை கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர். ஆட்சியாளர்களுக்கு மக்களின் நலத்தைப் பற்றி கவலை இல்லை. நலத்திட்டத்தால் கிடைக்கின்ற கமிஷனை கருத்தில் கொண்டு மட்டுமே ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் கவலை கொள்கின்றனர். தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களால் பேசப்பட்டு வரும்  தமிழ் மொழி உலக மொழிகளில் மிகவும் தொன்மையான மொழி. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 37431 அரசு பள்ளிகளிலும் குறிப்பாக 3054 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 1218 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ் வழியில் கற்பித்தல் பணிகள் நடைபெற்ற வருகின்றன . ஆக மொத்தம் 4272 மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 3,500 பள்ளிகளுக்கு மேல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படுகின்றன. அதேபோன்று தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் வரலாறு பொருளாதாரம் உள்ளிட்ட கலை பிரிவுகளை தவிர்த்து இயற்பியல் வேதியியல் கணிதம் தாவரவியல் விலங்கியல் போன்ற பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 150 அரசு கல்லூரிகளிலும் மூவாயிரத்துக்கும் அதிகமான அரசு மேல்நிலை பள்ளிகளிலும் அறிவியல் சார்ந்த தமிழ் வழி பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு ஒரு ஆசிரியருக்கு கூட முறையான கல்வி தகுதி இல்லை. அதாவது மேல்நிலைப் பள்ளிகளுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியரின் கல்வி தகுதி முதுகலை அல்லது முதுநிலை அறிவியல் பட்ட மேற்படிப்புடன் பி எட் படிப்பினை முடித்திருக்க வேண்டும். அதேபோன்று அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றுவதற்கு முதுகலை அல்லது முதுநிலை அறிவியல் பட்ட மேற்படிப்புடன் நெட் செட் அல்லது பிஎச்டி படிப்பினை முடித்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்குகின்ற அரசு கல்லூரிகளும் தமிழ் வழியில் எம்எஸ்சி இயற்பியல் வேதியியல் கணிதம் தாவரவியல் விலங்கியல் போன்ற பாடப்பிரிவுகளை இதுவரை நடத்தவில்லை. வரலாறு பொருளாதாரம்  உள்ளிட்ட  ஒருசில கலை பாடப்பிரிவுகளை ஒரு சில பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வி வழியாக வழங்கி வருகின்றன.கணிதப் பாடப்பிரிவை  பொருத்தமட்டில்  தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்  நடத்தி வந்தது அதுவும். யுஜிசி அனுமதி பெறாமல் நடத்தி வருகின்றன எனக் கூறி நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் உலகின் தொன்மையான மொழியின் மகத்துவத்தை பேணிக் காக்க வேண்டிய தமிழக அரசு  முதுநிலை பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் நடத்த கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் செவிசாய்க்கவில்லை. இதனால்தான் தொன்மையான தமிழ் மொழி ஆட்சி மொழியாக இல்லை. தமிழ் மொழிக்குப் பின் தோன்றிய மொழிகள் எல்லாம் ஆட்சி மொழியாக இருக்கின்றது. நமது மொழியின் பெருமையை நிலைநாட்ட தவறும் பொழுது வேறொரு மொழிகள் வளர்ச்சி பெறுகின்றன. குறிப்பிட்ட ஒரு சில அரசு கல்வி நிலையங்களை தவிர்த்து அரசுப் பள்ளிகளில் அரசு கல்லூரிகளில் தரமான கல்விகள் கிடைப்பதில்லை. எனவேதான் தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் தெருவுக்குத் தெருவுக்கு ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றன. இத்தனை ஆண்டுகள் எம் எஸ் சி படிப்புகளை தமிழ் வழியில் படிக்காத ஆங்கில வழியில் படித்த ஆசிரியர்களை கொண்டே   தமிழ் வழியில் பாடம் நடத்துகின்ற சூழ்நிலைக்கு ஆட்சியாளர்களால் ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இங்கே மொழிபெயர்ப்பாளர் களுக்கு பஞ்சமில்லை. எனவே அறிவியல் சார்ந்த தமிழ் வழி  பாடப்பிரிவுகளை அதிக அளவில் கொண்டு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவேன் என ஒன்றிய அரசும் தமிழ்நாடு தனி கல்வி கொள்கையை அமல்படுத்தும் என தமிழக அரசும் மாறி மாறி  பேசிக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் முதுநிலை அறிவியல் பாடப் பிரிவுகளை  தமிழில் கொண்டு வந்தால் தமிழக அரசுக்கு புகழ் சேர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதனால் அறிவியல் சார்ந்த படைப்புகள் ஆராய்ச்சிகள் கட்டுரை வெளியீடுகள் அதிகரிக்க  வாய்ப்பினை ஏற்படுத்தும். கிராமப்புற மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும். தேசிய கல்விக் கொள்கையோ அல்லது தமிழ்நாடு கல்விக் கொள்கையோ சொல்லிக் கொடுக்கின்ற ஆசிரியர்களுக்கு குறிப்பாக தற்காலிக ஆசிரியர்களுக்கு நிரந்தரப் பேராசிரியர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க அரசுகள் முன் வர வேண்டும். அல்லது தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் நேரடியாக வங்கிக் கணக்கு வழியாக ஒன்றிய அரசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவிலேயே தற்காலிக ஆசிரியர்களுக்கு குறிப்பாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் 7000 அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குகின்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது ஆசிரியர் சமுதாயத்துக்கு சீர்கேடாக பார்க்கப்படுகிறது. மேலும் கல்வியானது மாநில பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு தற்போது பொதுப் பட்டியலில்   இருந்து வருகிறது. ஆனால் மாநிலத்தில் பணியாற்றுகின்ற தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் மிக மிக சொற்பமான அளவில் சம்பந்தப்பட்ட மாநில அரசால் வழங்கப்படுவதால் ஏராளமான தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் அவல நிலைக்கு உள்ளாகின்றனர். இதுவரை குறைந்த வருமானத்தின் காரணமாக ஏற்பட்ட கடன் தொல்லையாலும் மன உளைச்சலாலும் தற்கொலை  செய்து கொண்டும் நோய்வாய்ப்பட்டும் மரணமடைந்துள்ளனர். இதுவரை எந்த அரசும் ஒரு ரூபாய் கூட நிவாரணத் தொகை வழங்கியது இல்லை. எனவே இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் தற்காலிகமாக பணியாற்றும்    ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்பதன் அடிப்படையில்  ஊதியத்தினை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மத்திய  அரசு வழங்கிட நடவடிக்கை எடுக்க  வேண்டும். அப்பொழுதுதான் தரமான கல்வி மாணவர்களுக்கு கிடைக்கும்.  எனவே  முக்கியமான கலை பாடப்பிரிவுகளையும் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளையும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகளையும் தமிழ் வழியில் நடத்திடுவதற்கு புதியதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதல்வர் அவர்களும் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு கல்லூரியில் முதுநிலை அறிவியல் படிப்புகளில் தமிழ் வழி பாடப்பிரிவு கோரிக்கையினை பரிசீலனை  செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.