WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 13, 2024

காலாண்டு தேர்வுக்கு மாணவர்கள் ஆயத்தம்; வரும் 19ல் துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது.

 

அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும், 20ம் தேதி தேர்வு துவங்குகிறது. அதன்படி, 20ம் தேதி தமிழ், 21ம் தேதி - உடற்கல்வி, 23ல் - ஆங்கிலம், 24ல் - விருப்ப மொழி, 25ல் - கணிதம், 26ல் - அறிவியல், 27ல் - சமூக அறிவியல் பாடத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதேபோல, 6ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, 9:30 முதல் 11:30 மணி வரையும், 7ம் வகுப்புக்கு மதியம், 1:15 முதல் 3:15 மணி வரையும், 8ம் வகுப்புக்கு, காலை, 9:30 முதல் பகல் 12:00 மணி வரையும், 9ம் வகுப்புக்கு மதியம், 1:15 முதல் மாலை, 4:30 மணி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, 9:30 முதல், 12:45 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு மதியம், 1:15 மணி முதல், மாலை, 4:30 மணி வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, 9:30 முதல், 12:45 மணி வரையும் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, 19ம் தேதி தமிழ், 20ம் தேதி ஆங்கிலம், 21ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்; 23ல் கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், சத்துணவு மற்றும் தொழில்கல்வி; 25ல் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வு நடக்கிறது.

26ம் தேதி இந்திய பண்பாடு மற்றும் நெறிமுறைகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்; 27ம் தேதி, உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழில்பாடங்கள் நடக்கிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, 19ம் தேதி தமிழ், 20ம் தேதி ஆங்கிலம், 21ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்; 23ம் தேதி கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், சத்துணவு மற்றும் தொழில்கல்வி; 25ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் தேர்வு நடக்கிறது.

26ம் தேதி, இந்திய பண்பாடு மற்றும் நெறிமுறைகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்; 27ம் தேதி, வேதியியல், கணக்குப்பதிவியல்,புவியியல் தேர்வு நடக்கிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.