WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 8, 2024

ஆசிரியர்களே உண்மையான சொத்து'.

 கடந்த 1999ல் துவங்கப்பட்ட எங்களது கல்வி பயணம், தற்போது 25ம் ஆண்டை எட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திறன் தேடலுடன் கல்லூரியை விட்டு வெளிவரும் இன்ஜினியரிங் மாணவர்களது தேவைகளை உணர்ந்து, யுனைடெட் இன்போடெக் பயிற்சி மையம் கடந்த 1999ல் துவக்கபப்ட்டது. முதல் 10 ஆண்டுகளில் 12 ஆயிரம் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சார்ந்த திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து, இன்ஜினியரிங் கல்லூரி துவக்கப்பட்டு, தற்போது 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று ஒரே கல்வி வளாகத்தில் 6 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

நம் நாட்டின் கல்வித்தரம் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்றால் ஒரு மாணவரது எந்த தேடலுக்கும் தீர்வு காணும் இடமாக ஒரு கல்வி நிறுவனம் இருக்க வேண்டும். அதாவது, ஒரே வளாகத்தில் இன்ஜினியரிங், கலை, அறிவியல் என பல்வேறு துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்போது தான், தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்தும் பல்துறை சார்ந்த அறிவை மாணவர்களுக்கு முறையாக வழங்க முடியும். இதர துறை சார்ந்த 'புராஜெக்ட்'களை ஒரு மாணவரால் ஒரே கல்வி வளாகத்தில் எளிதாக மேற்கொள்ள முடியும்.
சிறப்பு பயிற்சி

சமுதாயம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற கனவுடன், கிராமப்புறங்களை சேர்ந்த பெரும்பாலான முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், கல்லூரிக்கு வருகின்றனர். பொருளாதார தேடலைவிட, சமுதாயத்தில் தான் சந்தித்த பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் முழுமுனைப்புடன் அவர்களால் செயல்பட முடிகிறது. கிராமப்புறங்களை சார்ந்த மாணவர்களே, சமூதாய பிரசனைகளுக்கு தீர்வு கண்டு அதிக எண்ணிக்கையில் தொழில்முனைவோராகவும் வளம்வருகின்றனர். ஆகவே, எங்கள் கல்வி நிறுவனங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த, மாணவர்களிடம் புதைந்துள்ள திறனை வளர்க்கும் விதமாக உரிய பயிற்சி அளித்து, தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்கிறோம்.
வீடியோ விளையாட்டுகளில் 'லெவல் 1, 2,3' என்று இருப்பது போல், கணிதம் மற்றும் இதர பாடங்கள் சார்ந்த சிறு, சிறு சிக்கல்களை கம்ப்யூட்டர் உதவியுடன் தீர்க்க மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம். சுமார் ஆயிரம் சிக்கல்களுக்கு முதலாம் ஆண்டில் மாணவர்கள் தீர்வு காண்கிறார்கள். இரண்டாம் ஆண்டில் அடுத்தகட்ட சிக்கல்களை தீர்க்கும் வகையிலான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவ்வாறு 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதால், இறுதி ஆண்டில் சமுதாயத்தில் நிலவும் நிகழ்கால பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன்களை மாணவர்கள் பெறுகின்றனர்.
சர்வதேச குடிமகன்
சர்வதேச அளவிலான வளர்ச்சியால், ஒரு பட்டதாரி பல்வேறு நாடுகளில் பணிபுரியம் வாய்ப்புகள் பெருகியுள்ளதால், தற்போதைய மாணவர்கள் அனைவரும் சர்வதேச குடிமகன்களாக உள்ளனர். ஆகவே, அதற்குரிய திறன்களை கல்லூரியில் படிக்கும்போதே பெறுவது அவசியம். உலகம் 'அப்டேட்' ஆவதுபோல் நாமும் 'அப்டேட்' ஆகவில்லை என்றால், விரைவில் நாம் 'அவுட்டேட்' ஆகிவிடுவோம்.
சர்வதேச அளவிலான கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இந்திய கல்வி நிறுவனங்கள் முனைப்புடன் முழுவீச்சியில் செயல்பட வேண்டிய சூழலில் உள்ளன. கட்டடம், ஆய்வகங்கள் போன்றவற்றை விட திறன்மிக்க ஆசிரியர்களே ஒரு கல்வி நிறுவனத்தின் உண்மையான சொத்து என்பதே எனது கருத்து.
-சண்முகம், தலைவர், யுனைடெட் கல்வி நிறுவனங்கள், கோவை.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.