WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 15, 2024

10, 11-ம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலை எமிஸ் தளத்தில் பதிய அவகாசம்.

 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய அக்டோபர் 25-ம் தேதி வரை கெடுவை நீட்டித்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 'தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்களின் விவரங்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், சில பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றுவதில் சிரமங்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளன.

இதை கருத்தில் கொண்டு 10, 11-ம் வகுப்பு மாணவர்களின் தரவுகளை எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதி வாய்ப்பாகும். எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வுத்துறை இணைய தளத்தில் சென்று (www.dge.tn.gov.in) மாணவர்களின் தகவல்களை விரைந்து பதிவுசெய்ய வேண்டும். இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.