ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு மூலம் மொத்தம் 2,768 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், இதற்கான உத்தேச விடைக்குறிப்பு சுமார் 7 மாதங்கள் கடந்து வெளியாகியுள்ளது.
இடைநிலை ஆசிரியர் தேர்வு 2024 உத்தேச விடைக்குறிப்பு
இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூனை 21-ம் தேதி ஓஎம்ஆர் முறையில் நடைபெற்றது. தேர்வு முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இதற்கான விடைக்குறிப்பு கூட வெளியாகவில்லை என தேர்வர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர். இந்நிலையில், Part- B-ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட "A" வகை வினாத்தாளுக்குரிய கேள்விகளுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், ”சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு எண்: WMP No.16353 of 2024 and batch cases தீர்ப்பாணை நாள்: 18.03.2025-ற்கிணங்க, மேற்காணும் போட்டித் தேர்வில், Part- B-ல் தமிழ் மொழி வினாக்கள் கொண்ட "A" வகை வினாத்தாளுக்குரிய கேள்விகளுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Key) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான https://trb.tn.gov.in/ ல் வெளியிடப்பட்டுள்ளன. விடைக்குறிப்பை நேரடியாக பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.