குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை கருதி அவர்களின் கல்விக்கு பெற்றோர்கள் முன்னுரிமை அளித்து வருவதால் சர்வதேச பள்ளிகளை நடத்துவதில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஒரு காலத்தில் உயரடுக்கு பிரிவினரில் ஒரு சிலருக்கு மட்டுமே சர்வதேச பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் அதற்கான செலவினம் என்பது லட்சக்கணக்கில் இருந்தது. ஆனால், தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தால் சர்வதேச பள்ளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் தாக்கம், உலகளாவிய கல்வி வாரியங்களுடன் இணைந்து சர்வதேச பள்ளிகளை அதிகளவில் நடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாஉலகின் சர்வதேச பள்ளிகளின் சந்தையை கண்காணிக்கும் ஐஎஸ்சி ஆய்வில் தெரிவிக்கப்பட்ட புதிய தரவுகளின்படி இந்தியாவில் கடந்த 2019-ல் 884 சர்வதேச பள்ளிகள் இருந்த நிலையில், 2025 ஜனவரி நிலவரப்படி அதன் எண்ணிக்கை 972-ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச பள்ளிகளின் வளர்ச்சி 10 சதவீதமாக இருப்பதை பிரதிபலிக்கிறது.வுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
அதேசமயம், சர்வதேச பள்ளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகரிப்பு என்பது இந்த காலகட்டத்தில் 8 சதவீத வளர்ச்சி கண்டு 14,833-ஆக மட்டுமே உள்ளது. ஆக, இதனுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் சர்வதேச பள்ளிகளின் வளர்ச்சி வேகம் அதிகம்.
ஐபி மற்றும் ஐஜிசிஎஸ்இ திட்டங்களுடன் இணைந்து மகாராஷ்டிராவில் 210 சர்வதேச பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், சர்வதேச பள்ளிகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, கர்நாடகம், தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்களிலும் சர்வதேச பள்ளிகள் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகின்றன.
ஐஎஸ்சி ஆராய்ச்சி பிரிவின் மேலாளர் அபிஷேக் பாண்டே கூறுகையில், "அதிக இந்திய குடும்பங்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் என்ஆர்ஐ-க்கள் சர்வதேச பள்ளிகளையே தேர்வு செய்கிறார்கள். அதனால்தான், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களில் சர்வதேச பள்ளிகள் அதிக முதலீடுகளை மேற்கொள்கின்றன. இப்போது பெற்றோர்களின் வருமானம் அதிகரித்துள்ளது. மேலும், அவர்கள் உலகளாவிய பாடத்திட்டங்களை தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையின் எதிர்கால ஆதாரமாக பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் மேற்கத்திய பல்கலைக்கழகங்களுடன் பொருந்தக்கூடிய அமைப்புகளில் குழந்தைகளின் படிப்படை உறுதி செய்து, உலகளவாவிய வாய்ப்புகளுக்கான அவர்களது கதவுகளைத் திறக்கிறார்கள்" என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.