புதிய தேசிய கல்விக்கொள்கை -2020ன் படி, பாடத்திட்டங்களை புதுப்பிக்க வேண்டும் என பல்கலைகளுக்கு, பல்கலைகழக மானிய குழுவான யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி.,யின் செயலர் மணீஷ் ஜோஷி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கருத்தியல், கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றால், உலகம் அதிவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது.
தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் அனைத்தும், மறு வடிவமைக்கப்பட்டு, சிறிது காலத்திலேயே மேம்படுத்தப்படுகின்றன. அதன் வேகத்துக்கு ஏற்ப, நம் கல்வி முறைகளும் இருக்க வேண்டியது அவசியம்.
தேசிய கல்விக்கொள்கை - 2020 ஆனது, பாடத்திட்டத்தின் விரிவான மாற்றத்தையும், வலுவான மாற்றங்களையும் வரவேற்கிறது. கல்வியை முழுமையானதாகவும், நெகிழ்வாகவும், 21ம் நுாற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்பவும் மாற்றுவதையும் வலியுறுத்துகிறது.
பாடங்களை மனப்பாடம் செய்வதில் இருந்து விடுபட்டு, கருத்தியலை புரிந்து கொள்வது, விமர்சனம் செய்யும் அளவுக்கான சிந்தனையை வளர்ப்பது அவசியம். அதற்கேற்பவும், படைப்பாற்றல் மற்றும் பலதரப்பட்ட கற்றல், அனுபவமிக்க நடைமுறை கற்றலை மேம்படுத்துவதாகவும், பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.
இவற்றை கருத்தில் வைத்து, உங்கள் பல்கலைகள், இணைப்பு கல்லுாரிகளில் வழங்கப்படும் அனைத்து பாடங்களையும், மீண்டும் மதிப்பாய்வு செய்து, புதிய கல்விக்கொள்கைக்கு ஏற்ப திருத்தி, உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.