தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு நேற்று(ஜூலை 12) நடைபெற்றது. மொத்தம் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் தேர்வர்கள் தேர்வை எழுதினர். சென்னை எழும்பூரில் உள்ள தேர்வு மையம் ஒன்றுக்கு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் சென்றார். அங்கு தேர்வு பணிகளை அவர் பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது;
ஒரு மாதத்தில் குரூப் 1 முதல்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முதன்மை தேர்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவர். கேள்வித்தாள் தயாரிப்பின் போது அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்கக் கூடாது என்று வல்லுநர்களிடம் அறிவுரை வழங்கி உள்ளோம்.
இன்றைய குரூப் 4 தேர்வின் முடிவுகள் அடுத்த 3 மாதத்தில் வெளியிடப்படும். அடுத்து வரும் நாட்களில் 10 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. வினாத்தாள் எதுவும் கசியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.