WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 17, 2025

8-ம் வகுப்பு தனித்தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.


 

தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்கள் உதவியுடன் பயிற்சி பெறும் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும்.

அதன்படி நடப்பாண்டு 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 17) நிறைவு பெறுகிறது.

இதையடுத்து தனித்தேர்வர்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இடம்பெற்றுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.195 செலுத்த வேண்டும். இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 18, 19-ம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.