WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 1, 2025

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: அடுத்த ஆண்டு பிப்.17 முதல் ஏப்.9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 

 சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்​களுக்​கான பொதுத்​தேர்​வு​கள் பிப். 17-ல் தொடங்கி ஏப்​. 9-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. இந்த பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்வு நடத்​தப்​படு​கிறது. அதன்​படி நடப்பு கல்விஆண்​டுக்​கான பொதுத் தேர் வுக்கு மாணவர்​கள் தயா​ராக ஏது​வாக, தற்​காலிக தேதி பட்டியலைசிபிஎஸ்இ கடந்த செப். 2-ம் தேதி வெளி​யிட்​டது.

இந்த நிலை​யில், பள்​ளி​களின் வேண்​டு​கோளை ஏற்​று, அதில் சில திருத்​தங்​கள் செய்து இறுதி தேர்​வுக்​கால அட்​ட​வணை தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்ளது.
அதன்​படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்​வு​கள் பிப்.17-ல் தொடங்கி மார்ச் 10-ம் தேதி முடிவடை​யும். அதே​போல, 12-ம் வகுப்பு பொதுத் தேர்​வு​கள் பிப்.15-ல்
தொடங்கி ஏப்​.9-ம் தேதி முடிவடை​யும். தேர்​வு​கள் காலை அமர்​வில் 10.30 மணி முதலும், மதிய அமர்​வில் 1.30 மணி முதலும் தொடங்​கும்.

விரி​வான தேர்​வுக் கால அட்​ட​வணையை www.cbse.gov.in என்ற இணை​யதளத்​தில் இருந்து மாணவர்​கள், ஆசிரியர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். தேர்வு தொடங்​கு​வதற்கு 110 நாட்​களுக்கு முன்​பாகவே அட்​ட​வணை வெளி​யிடப்​பட்​டிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது. தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி, சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10-ம் வகுப்​புக்கு மட்​டும் இந்த கல்வி ஆண்டு முதல் 2 பொதுத் தேர்​வு​கள் நடத்​தப்பட உள்​ளன. முதல்​கட்ட தேர்​வு​கள் பிப்​ர​வரி​யில் தொடங்க உள்ள நிலை​யில், 2-ம் கட்ட தேர்​வு​களை மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்​த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.