பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்ட மாற்றம் தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நவ. 23, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கையை வடிவமைத்து தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான வல்லுநர் குழு மற்றும் அதை மேற்பார்வையிட்டு ஒப்புதல் அளிப்பதற்கான உயர்நிலைக் குழு என 2 குழுக்களை பள்ளிக்கல்வித் துறைசமீபத்தில் நியமனம் செய்தது.
உயர்நிலைக் குழுவில் அமைச்சர் அன்பில் மகேஸ், இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்ட 16 பேரும், பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட 20 பேரும் உள்ளனர். இந்நிலையில், பாடத்திட்டமாற்றம் தொடர்பாக சென்னையில் நவ.23, 24-ம் தேதிகளில்ஆலோசனை நடைபெற உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை வகிக்கிறார். இதில்பங்கேற்க குழு உறுப்பினர் கள் அழைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், தகவல்களை பாடத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.