சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைத்தூர கல்வியில் படித்து அரியர் வைத்தவரா நீங்கள்? இதுதான் சரியான தருணம் அரியர் தாளில் தேர்ச்சி பெற்று டிகிரி வாங்க பல்கலைகழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 1981-ம் ஆண்டு முதல் உள்ள மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம்
இந்தியாவில் உள்ள மிக பழமையான கல்வி நிறுவனங்களில் சென்னை பல்கலைக்கழகம் ஒன்றாகும். இங்கு பல்வேறு பிரிவுகளில் முதுகலை, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகிறது. பல அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது. பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி வழங்கும் பிரிவாக சென்னை பல்கலைக்கழகம் தொலைத்தூரக் கல்வி செயல்படுகிறது. இங்கு கலை, அறிவியல் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு மட்டுமின்றி, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் மற்றும் எம்பிஏ படிப்பும் வழங்கப்படுகிறது.
1981-ம் ஆண்டு முதல் செயல்படும் தொலைத்தூரக் கல்வியில் 16 இளங்கலை பட்டப்படிப்புகள், 22 முதுகலை பட்டப்படிப்புகள், 19 டிப்ளமோ மற்றும் 15 சான்றிதழ் படிப்புகள் CBCS முறையில் வழங்கப்படுகிறது. மொத்தம் 73 வகையான படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டு சேர்க்கை நடைபெறுகிறது
அரியர் மாணவர்கள்
அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் மாணவர்கள் தொலைத்தூரக் கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். நேரடி வகுப்புகளாக படிப்பை தொடர முடியாதவர்கள், வேலை பார்த்துக்கொண்டே படிக்க விரும்புகிறவர்கள், மேற்படிப்பை தொடர விரும்புகிறவர்கள் பயனடைந்து வருகிறார்கள். நேரடி வகுப்புகள் போலவே, அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் வழியாக வழங்கப்பட்டு, பருவத்தேர்வுகள் நடத்தப்படும். இதில் அரியர் வைக்கும் மாணவர்கள் பட்டப்படிப்பு காலம் முடிவடைவதற்கு அந்த பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும். அப்படி இல்லையென்றாலும், அரியர் பாடங்களை எழுதி தேர்ச்சி பெற 3 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
மீண்டும் ஒரு வாய்ப்பு
ஆனால், குறிப்பிட்ட கால அவகாசத்தில் பல காரணங்களால் அரியர் தேர்வை எழுதாமல் பலர் அவர்கள் பட்டம் பெறும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளனர். இந்நிலையில், அரியர் வைத்து பட்டம் பெறாமல் உள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் 1981-82 கல்வி ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தொலைதூரப் படிப்பில் சேர்ந்து படித்து, அரிய வைத்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 37 வருடங்கள் வரை அரியர் வைத்துள்ளவர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளில் அரியர் வைத்த அனைவரும் வரும் டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறவுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
டிசம்பர் தேர்வை எழுத ஆர்வமுள்ள அரியர் மாணவர்கள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தில் நவம்பர் 10-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்யலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. படிப்பின் விவரங்களை மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் அளிக்கப்படும் கடைசி வாய்ப்பு இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1981-ம் ஆண்டு முதல் தொலைத்தூரக் கல்வியில் சேர்ந்து, அரியர் வைத்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் தொலைத்தூரக் கல்வி நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.