WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 4, 2025

சிறப்பு தகுதித்தேர்வு; ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.

 வரும், 2026, ஜன. 24ல் நடக்கும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி (2009) ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பாடம் கற்பிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனால், 2012 முதல் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த, 15 மற்றும் 16ம் தேதி, மாநிலம் முழுதும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடந்தது; 4.80 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

இந்நிலையில், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையின் போது, '2011ம் ஆண்டு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் 'டெட்' தேர்வு கட்டாயம்,' என உத்தரவிடப்பட்டது. அதே நேரம், ஓய்வு பெற ஐந்து ஆண்டுகள் உள்ளவர்களுக்கு இத்தேர்வில் இருந்து தளர்வு அளிக்கப்படுவதாக தெரிவித்தது.

இதையடுத்து, தமிழகத்தில், 2026 ஜன. முதல் பணியில் உள்ளவர் உட்பட தகுதியானவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமென தமிழக அரசு அறிவித்தது. துவக்கப்பள்ளி, இடைநிலை, பட்டதாரி என ஒரு லட்சம் ஆசிரியருக்கு மேல், சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டியுள்ளது. முதல் தாள் 2026 ஜன. 24ம் தேதியும், 2ம் தாள் 25ம் தேதியும் நடக்கிறது.

தேர்வெழுத உள்ள ஆசிரியர்கள், https://trbm.gov.in என்ற இணையதளம் வாயிலாக, டிச. 20 வரை விண்ணப்பிக்கலாம் தேர்வுக்கு அனைத்து மாவட்டங்களில் மையம் அமைக்கப்படும்.

விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள டிச. 21 மற்றும் 22 இரு நாள் காலஅவகாசம் தரப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 1800--4256-753 என்ற எண் அல்லது gic.trbgrievances@tngov.in என்ற இ--மெயில் முகவரி மூலமும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.