WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 25, 2026

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி.

 

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.25) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தோ்வானது தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு ஜன.21 முதல் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை சுமாா் 13 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் பிப்.16-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஜேஇஇ 2-ஆம் கட்ட தோ்வு ஏப்.1 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் புதன்கிழமையுடன் (பிப்.25) நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள் jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்.27, 28 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும்.

முதல்கட்ட தோ்வை எழுதிய மாணவா்களும் இதில் பங்கேற்கலாம். தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு உள்பட இதர தகவல்கள் பின்னா் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.