WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 15, 2026

பிளஸ் 2 பொதுத்தேர்வில் முறைகேடு; சி.இ.ஓ.,வுக்கு 'நோட்டீஸ்'.

 




பிளஸ் 2 பொதுத்தேர்வில், தனியார் பள்ளியில் நடந்த முறைகேடு விவகாரத்தை, பள்ளி கல்வித்துறை கண்காணிப்பு அலுவலருக்கு தெரிவிக்காமல் மறைத்ததாக எழுந்த புகாரில், சி.இ.ஓ.,விடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.



சேலம் மாவட்டம், முத்தம்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மார்ச் 17ல், பிளஸ் 2 கணிதத்தேர்வு நடந்தது. அப்போது, அப்பள்ளி மாணவர்கள், அடிக்கடி கழிப்பறைக்கு சென்று வந்தனர். இதை கவனித்த, முதன்மை கண்காணிப்பாளராக பணிபுரிந்த, மேட்டுப்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீராம், கழிப்பறைக்கு சென்று பார்த்தார்



அங்கு, அதே பள்ளியை சேர்ந்த இரு ஆசிரியர்கள், மொபைல் போனில் பேசியபடியும், வினாத்தாள்களை முன்கூட்டியே, 'லீக்' செய்து, அதற்கான விடைகளை கழிப்பறையில் ஒட்டி இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம், அன்று மாலை எழுத்துப்பூர்வமாக அவர் புகார் அளித்தார். ஆனால், இந்த விவகாரத்தை மறைக்க, தனியார் பள்ளியிடம், சி.இ.ஓ., பேரம் பேசி வருவதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து, ஏப்., 9ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது.


இதையடுத்து, பள்ளி கல்வித்துறை சார்பில், சேலம் மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் குப்புசாமி, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு விளக்கம் கேட்டு, நேற்று முன்தினம்'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.



No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.