WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 12, 2026

போலி கல்வி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்: மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை.

 

உயர்​கல்வி சேர்க்கை பெறு​வதற்கு முன்​பு, சம்​பந்​தப்​பட்ட கல்வி நிறு​வனம் அங்​கீ​காரம் பெற்​றுள்​ளதா என்​பதை மாணவர்​கள், பெற்​றோர் உறு​தி​செய்யுமாறு யுஜிசி அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து பல்​கலைக்​கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்ட அறி​விப்பு விவரம்: மத்​திய, மாநிலப் பல்​கலைக்​கழகங்​கள் அல்​லது யுஜிசி சட்ட விதி​களின்​படி உரிய அங்​கீ​காரம் பெற்ற உயர்​கல்வி நிறு​வனங்​கள் மட்​டுமே பட்​டங்​களை வழங்க முடி​யும் என்​பது மாணவர்​கள், பெற்​றோரின் கவனத்​துக்கு கொண்டு வரப்​படு​கிறது.

எனினும், யுஜிசி விதி​முறை​களுக்கு முரணாக பல்​வேறு நிறு​வனங்​கள் பட்​டங்​களை வழங்கி வரு​வ​தாக புகார்​கள் கிடைக்​கப் பெற்​றுள்​ளன. இத்​தகைய பல்​கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​கள் வழங்​கும் பட்​டங்​கள், யுஜிசி​யால் அங்​கீகரிக்​கப்​ப​டாது.

அவை உயர்​கல்வி மற்​றும் வேலை​வாய்ப்​புக்​கும் செல்​லுபடி​யா​காது. எனவே, உயர்​கல்விக்​காக சேர்க்கை பெறு​வதற்கு முன்​பு, அந்த கல்வி நிறு​வனம் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளதா என்​பதை மாணவர்​கள், பெற்​றோர் உறுதி செய்​து​கொள்ள வேண்​டும்.

யுஜிசி அங்​கீ​காரம் பெற்ற பல்​கலைக்​கழகங்​கள், போலி உயர்​கல்வி நிறு​வனங்​களின் விவரங்​களை www.ugc.gov.in எனும் இணை​யதளத்​தில் சரி​பார்த்​துக் கொள்​ளலாம். ஏதேனும் பல்​கலைக்​கழகம் அல்​லது கல்வி நிறு​வனம் யுஜிசி விதி​களுக்கு முரணாக பட்​டங்​கள், படிப்​பு​களை வழங்​கு​வது தெரிய​வந்​தால், ugcampc@gmail.com என்ற மின்​னஞ்​சலுக்கு புகார்​களை அனுப்​பலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.