தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில், பிரதான பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்.2-ம் தேதியுடன் முடிந்த நிலையில், நேற்று மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 9 விருப்ப மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பொதுத் தேர்வு முடிவடைந்ததை அடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.10 முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 20-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.